Idhayamennum Koyil
Pona Machaan Thirumbi Vandhan
Hero K.A. Thangavel
Music Director C.N.Pandurangan
Lyricist V.Seetharaman
Singers A.M.Raja,U.R.Jeevarathinam
Year 1954
Song Lyrics

இதயமென்னும் கோயில் தன்னில்
இன்ப தெய்வம் உன்னை – தினமும்
துதி புரிந்து காதல் மலர் சூடி மகிழ்வேனே
சூடி மகிழ்வேனே.....

ஆசையாகும் நெய்யை ஊற்றி
அன்புத் திரியேற்றி – நான்
நேசம் என்னும் விளக்கை ஏந்தி
ஆலாத்தி எடுப்பேனே

கண்ணைப் பறிக்கும் வண்ணத்தோகை
கலாப மயிலே
என் எண்ணமறிந்து விண்ணிலிருந்து
என்னை மயக்கும் முகிலே..ஆ....ஆ...

கன்னித் தமிழிலே.......காதற் கவியிலே...
கலந்த இன்பமதைக் காண்போம் நம் வாழ்விலே
கலந்த இன்பமதைக் காண்போம் நம் வாழ்விலே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY