Odam Pola Namadhu
Pona Machaan Thirumbi Vandhan
Hero K.A. Thangavel
Music Director C.N. Pandurangan
Lyricist V.Seetharaman
Singers A.L.Ragavan,V.N.Sundaram,Sathiyavathi,Subbulakshmi
Year 1954
Song Lyrics

ஓடம் போல நமது வாழ்வு ஓடணும் –மன
உல்லாசமே அடைய வழி நாமே தேடணும்
மறைந்த சோதரியை மறுபடி தேடி வந்து
மணமே செய்து வைத்து கண்ணால் காண வேணும் (ஓடம்)

மணமே புரிய வந்த மாப்பிள்ளையும் ஓடி விட்டான்
எனதுயிர் அண்ணனை நான் எவ்விதமும் பார்த்திடணும்
பொங்கும் அலையிதே கரை சேரும் பான்மை போல்
போன மச்சான் திரும்பி இங்கே வரவேணும் பூமணத்துடன் (ஓடம்)

இன்பமுடன் துன்பம் வரும் வாழ்விலே அதைக்
கண்டு அஞ்சினாலே ஏதும் பயனில்லே பரந்த உலகினிலே
எதையும் ஏற்று வாழும் மனோதிடம் இருந்திடணும்
ஓடம் போல நமது வாழ்வு ஓடணும்.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY