Vinodhamana Ulagathile
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Villiputhan
Singers Seerkazhi Govindarajan
Year 1959
Song Lyrics

வினோதமான உலகத்திலே – பார்
விதவிதமான பைத்தியம் – நம்ம
வீட்டுலே ரோட்டிலே – நாட்டிலே
இப்போ கூட்டம் கூட்டமா பைத்தியம் (வினோதமான)

பேனா பிடிக்கிற பெரிய மனுஷங்க
பேச்சிலே எழுத்திலே பைத்தியம்
பெத்தவ பிள்ளையை வளக்கிற வகையொரு
பிரியமும் பாசமும் பைத்தியம்

ஆணோடு பொண்ணு அளந்து நடக்கிற
வயசிலே காதல் பைத்தியம்
ஆண்டிக்குக்கூட சமயம் கிடைச்சாக்க
அவனும் காதல் பைத்தியம் (வினோதமான)

குலவிளக்கான தன் கொண்ட மனைவியைக்
கூடாது என்பதோர் பைத்தியம் – கெட்ட
குணமான விலைமாதர் குரங்காக இருந்தாலும்
ரதி என்று விரும்புற பைத்தியம்
சொந்த மதியை இழந்திட்ட பைத்தியம் (வினோதமான)

பாபத்தைத் தீர்க்க பக்தி மார்க்கத்தில்
பணத்தை இறைக்குது பைத்தியம்
பழைய சோத்துக்கும் வழியில்லாமே
பாதையில் சாகிற பைத்தியம்

உழைச்ச கூலியைக் கேக்குறபோது
உர்ருன்னு உறுமுது பைத்தியம்
உலகத்துக்கெல்லாம் உழைச்சி கொடுத்துட்டு
ஒட்டாண்டியாகிற பைத்தியம் (வினோதமான)

மண்ணுக்குள்ளே போற மண் பொம்மை
கண்ணுக்கு ஒண்ணும் தெரியாதடி – ஞானம்மா
கண்ணும் கிடையாதடி – வெறும்
உயிருக்கும் உடலுக்கும்
பொருளுக்கும் புகழுக்கும் ஒட்டாமே நிக்குதடி
சத்தியம் செத்துப் பொழைக்குதடி........(வினோதமான)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY