Vizhivasal Azhagana Manimandapam
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Villiputhan
Singers P.Suseela,Seerkazhi Govindarajan
Year 1959
Song Lyrics

விழிவாசல் அழகான மணி மண்டபம் – உன்
விழிவாசல் அழகான மணி மண்டபம் – மின்னல்
விளையாடும் புதுப் பார்வை உயிர்த் தாண்டவம்
விழிவாசல் அழகான மணி மண்டபம்...

வண்டாடும் மலர் வீதி அலங்காரமே ஆ...ஆ..
வண்டாடும் மலர் வீதி அலங்காரமே - என்னை
வரவேற்க வரும் இன்ப சாம்ராஜ்யமே
விழிவாசல் அழகான மணி மண்டபம்...

புகழ் மாலை அமுதான கவி மாளிகை – உன்
புகழ் மாலை அமுதான கவி மாளிகை – வாச
புது மாலை உனை நாடி வரும் தாரகை
புகழ் மாலை அமுதான கவி மாளிகை

புனல் வான தேன் கூடு பார் வெண்ணிலா
புனல் வான தேன் கூடு பார் வெண்ணிலா – வந்த
பொழுதெல்லாம் உன் பாடல் என் நெஞ்சிலே
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..

செடியிலே பூவிருக்கு அழகாக
உன் சிரிப்பிலே நானிருக்கேன் உனக்காக
பூங்கொடியிலே கோணலிருக்கு எதுக்காக
பெண்கள் குணத்திலே நாணமிருக்கு அதுக்காக

நாணம்தானே பெண்களுக்கு நாணயம் – இந்த
நல்ல பண்பு கொண்ட பெண்கள்
குடும்ப வாழ்வின் ஆலயம்...

ஞானமோடு பேசுதிங்கே ஓவியம்
கலை ஞானமோடு பேசுதிங்கே ஓவியம் –தமிழ்
வானிலாடும் தாரகை நீ உலக மகா இலக்கியம்
முல்லையொடு தென்றல் சேரும் நேரம்
முதல் முத்தம் ஒன்று கேட்டு வண்டு பாடுதே சிங்காரம்

குறும்பு வார்த்தை ஏனோ
பனி கொஞ்சும் கண்கள் பாரும்
பிறை அரும்பும் இதழில் ஊறும் தேனை
எனக்குத்தா இந்நேரம் மிக பொருத்தமான நேரம்
ஓ...ஓ...ஓ...ஓ....ஆ....ஆ....ஆ....ஆ....(விழிவாசல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY