Vanakkam Vaanga Mappille
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Villiputhan
Singers P.Suseela,Seerkazhi Govindarajan
Year 1959
Song Lyrics

வணக்கம் வாங்க மாப்பிள்ளே – அரேடிர்
மன வருத்தம் எதுக்கு முகத்திலே
வணக்கம் வாங்க மாப்பிள்ளே
நினைச்சதை முடிச்சிடுவா – பொம்பளை
மனசு வச்சா பூலோகமே எங்க கையிலே
இது பொய்யில்லே பூலோகமே எங்க கையிலே (அரேடிர்)

கில்லாடி இவரு ஆம்பிள்ளே – அரேடிர்
வந்து கேட்டுப் பாரு வெளியிலே
கில்லாடி இவரு ஆம்பிள்ளே
துள்ளாதே தெரிஞ்சுக்கோ நீ பொம்பளே
ஆம்பிள்ளே துணிஞ்சிட்டா உலகம் பெரிசில்லே
இது பொய்யில்லே துணிஞ்சிட்டா உலகம் பெரிசில்லே (அரேடிர்)

எல்லோரும் உங்களைப் போல
எங்களை மிரட்டிப் பாத்தாங்க
எதுத்துக்கிட்டா சிவசிவான்னு
இமயமலைக்குப் போனாங்க
வில்லாதி வீர சூரன் வெடவெடத்து போனாங்க
விஷயமுத்துன ஞானி கூட வீடு தேடி வந்தாங்க (வணக்கம்)

பத்தாம்பசலி கதையைச் சொல்லி
பதியம் போட்டு பாக்கறே
பழைய குப்பையைக் கிளறி ஆண்கள்
பட்டாளத்தைத் தாக்குறே

வித்தாரமா பேசி என்னை
ஜெயிக்கலான்னு ஏய்க்கிறே
வீடு தேடி வந்த கணவன்
கோமாளியா கேக்குறேன்
கில்லாடி இவரு ஆம்பிள்ளே......(அரேடிர்)

எல்லாம் தெரிஞ்ச மனுஷன் போல
நடிப்புக் காட்டுறே
கல்லானாலும் கணவன் என்பதைச்
சொன்னால் மொறைக்கிறே

உள்ளபடி பாக்கப்போனா
உன்னை ஜெயிச்ச கண்ணாட்டி
சொல்லாதே அப்படி நீயென்
சொத்தா வந்த சீமாட்டி

இத பாத்தியா பூலோகமே எங்க கையிலே
அதை மாத்திக்கோ கில்லாடி இவரு ஆம்பிள்ளே...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY