Needhi Onnu Thalaikku
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Villiputhan
Singers C.S.jayaraman
Year 1959
Song Lyrics

மாலையிட்ட மங்கை இவள் வாழ்க்கையிலே
மலர்ந்த இன்பம் அரும்பி வரும் வேளையிலே
சீலமிலாப் பேதை மனப் போக்கினாலே
சீரழிய ஓடுகிறாள் மடமையாலே......

நீதி ஒண்ணு தலைக்கு மேலே இருக்கு பெண்ணே – நீ
நினைத்ததெல்லாம் நடக்காது பேதைப் பெண்ணே – கால
வேதனைக்கு விருந்து வைத்து அழைக்காதே – என்று
விளக்கம் கூறும் பெரியோரை பழிக்காதே
பேதமையால் அலைந்து வாழ்வை அழிக்காதே – நீ
பிறந்த வீட்டின் பெருமை தன்னை ஒழிக்காதே.......நீதி)

புலியை நம்பி ஓடாதே நில்லடி கண்ணே – என்று
புலம்பி நெஞ்சம் துடித்து அண்ணி வடிக்கிறாள் கண்ணீர்
வலிய வந்த கரும்பு என்று கொடியவன் உன்னை –இன்று
வளைத்துக் கொண்டால் என்ன செய்வாய்
கேளடி பெண்ணே.......கேளடி பெண்ணே........(நீதி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY