Kadavul Padaikkavillai
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Villiputhan
Singers P.Leela,M.L.Vasanthakumari
Year 1959
Song Lyrics

கடவுள் படைக்கவில்லை – ஆண்கள்
கருதும் அடிமை இனமென பெண்ணை
கடவுள் படைக்கவில்லை
எடுத்ததற்கெல்லாம் தப்பெடுக்கும் ஆண்கள்
இஷ்டப்படி வாழ்வில் கஷ்டப்படுத்த பெண்ணை (கடவுள்)

கடவுள் படைக்கவில்லை – பெண்கள்
கருதும் கொடிய இனமென ஆணை
கடவுள் படைக்கவில்லை
அடுத்து வரும் உடம்பின் அழுக்கினைப் போல்
துன்பம் கொடுத்து வரும்
பெண்கள் குலத்தை வணங்க ஆணை (கடவுள்)

கடமையின் சிகரம் பெண்ணல்லவோ – காலம்
கண்டெடுத்த தாய்மைக் கண்ணல்லவோ
குடித்தன கலைக் கூட விளக்கல்லவோ இன்பம்
கொடுக்கப் பிறந்த கண்ணை
கொடுமைக்காரியாக வாழ உலகினிலே (கடவுள்)

திடமுடன் உழைப்பவன் ஆணல்லவோ – வான
செங்கதிரோன் இன தூணல்லவோ
நடுக் கடல் தனிலாடும் படகல்லவோ – வாழ்க்கை
நடத்தும் தலைவன் தன்னை சூழ்ச்சிக்காரன்
என்று வாழ உலகினிலே.....(கடவுள்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY