Kalamellam Maari Pochche
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Mugavai Rajamanikkam
Singers K.Jamunarani
Year 1959
Song Lyrics

காலமெல்லாம் ஆஹா...காலமெல்லாம் ஆஹா
காலமெல்லாம் மாறிப் போச்சே
தலைக்கீழா மாறிப்போச்சே
காதலெல்லாம் மீறிப் போச்சே தந்தனத்தையா
கோலமெல்லாம் மாறிப் போச்சே தந்தனத்தையா
இய்யா..........மிய்யா.......கிய்யா......(காலமெல்லாம்)

மைனருங்க வலையிலே வீழ்ந்திடாதே
வம்பருங்க மோசமத்தை நம்பிடாதே
மைனருங்க வலையிலே வீழ்ந்திடாதே
வம்பருங்க மோசமத்தை நம்பிடாதே
நம்பிடாதே வம்புதானே நாளும் துன்பமே (காலமெல்லாம்)

எனையாளும் ராணி இல்லறத்தின் ஜோதி
என்று சொல்லுவானடி மோகமது மீறினாலடி
மறு நாளில் கேறி..றி....றி...தீர்ந்ததும் சீறி..றி...றி...
மறுநாளில் கேறி தீர்ந்ததும் சீறி
அடி சதிகாரி போடி என்று சொல்லுவானடி (காலமெல்லாம்)

சீரழிஞ்ச காதலினால் நாடு சிரிக்கும்
வீதி வீதியா அலைஞ்சா ஊரு சிரிக்கும்
மாறிப் போகும் ரூபமே ரோகம் வந்து சேருமே
சாபம் வந்து நேருமே தீராது சோகமே.....

கைப் பிடித்த கணவனையே
கதிகலங்கச் செய்தேனே மதியிழந்து போனேனே
ஈசனே எந்தன் தலையிலே
ஏனிவ்வாறு எழுதினாயோ பரமேஸ்வரா
மானம் அழிந்து வாழ்வு இழந்தேன்
வசைக்கும் பழிக்கும் ஆளானேன்

பதியே தெய்வமே மனையே சொர்க்கமே
பெண்ணுக்கிதுவே அறமே
இதை நம்பினோர்க்கே சுகமே
காதலெல்லாம் மீறிப் போச்சே தந்தனத்தையா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY