Kadhal Endrale Thenallava
Kadhalikka Vanga
Hero Jaisankar & Sreekanth
Music Director Ragava Naidu
Lyricist Veerapandiyan
Singers P.Suseela,Manorama
Year 1972
Song Lyrics

காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா
கனிவோடு பாராட்டவா ஓ...ஓ....
கதைப் பேசி தாலாட்டவா......(காதல்)

காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க (காதல்)

உலகாளும் காதல் நமதாக வேணும்
வாராய் ஓய்.....நீ வாராய்
உன்னோடு நானே உறவாட வேண்டும்
தாராய்....ஒய்......அன்பு தாராய்
உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி
புதிய உறவின் கவிதை ஆகலாம்

காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க......

ஓடோடி நானே உனைத் தேடி வந்தேன்
ராஜா ஒய்.....ஆசை ராஜா
நீதானே தேவை எனை நானே தந்தேன்
கண்ணா ஒய்.....காதல் மன்னா
நமது இந்த வேகம் புது நிலவுப் பயணமாகும்
புதுமை கலையின் இனிமை காணலாம்

காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க

உல்லாசத் தேனீ சித்தானை மேனி
மாமா......ஒய்...ஆசை மாமா
சல்லாப ராணி சதிராடும் கன்னி
மாமா ஹோய்ஹோய்...மீசை மாமா
நீயும் நானும் ஒண்ணு இனி
நமக்கு வேணும் ரெண்டு
அருமையான குடும்பம் ஆகலாம்...(காதல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY