Vithiye Un Leelai Idhuvo
Song Lyrics

விதியே உன் லீலை இதுவோ
மனிதன் ஒரு விளையாட்டு பொம்மையோ
வீண் மாயை தானோ
ஜனனம் முதல் மரணமும் சுக துக்கம் யாவுமே
சகடமென சுற்றி வர விகடமே செய்வதேன்

புவனமதில் மாளாத மூவாசை கடலிலே
சவமாகும் மானிடரை சதி செய்வதேனோ
காயோடு கனியோடு பூ பிஞ்சு வாழ்விலே
காலனும் தூது வர ஜாலமே செய்வதேன்

காயாபுரிக்கோட்டை கற்கோட்டை அல்லவே
கணத்திலே உடல் வேறு உயிர் வேறு செய்வதேன்
விதியே உன் லீலை இதுவோ
மனிதன் ஒரு விளையாட்டு பொம்மையோ
வீண் மாயை தானோ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY