Ye....Ayyasami Ada Nee
Varusham 16
Hero M.Karthik
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,K.S.Chitra
Year 1989
Song Lyrics

ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி
யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா
ஏ.....ஏ....அய்யாசாமி ...அட நீ ஆளக்காமி

அடி சின்னப் பொண்ணு நட்டு வச்ச
செங்கழனி நாத்துத்தான்
அதை சேர்த்தணைக்க காத்திருக்கு
தெக்கு திசை காத்துத்தான்

அது பாடுதடி பாட்டு
அந்த தெம்மாங்கத்தான் கேட்டு
ஒரு மாலையிட வந்தானடி மாமன்

வாரம் நாலாச்சு முழுசாகத் தூங்கி
உறக்கம் போயாச்சு விழியை நீங்கி
நேத்து ராப்போது சந்திரன் வந்த நேரம்

நீயும் இல்லாது மனதினில் பாரம்
மாலை வந்தாலே மயங்குகிறேன் நானும்
மானே மைனாவே மஞ்சமிட வேணும்

நெஞ்சில வச்சு......தாலாட்டு
நீயும் என்னை........சீராட்டு
உல்லாசமும் சந்தோஷமும்
உன் பாட்டுத்தான் கொண்டாடுது..(ஏ அய்யாசாமி)

அத்த மக ராசத்திக்கு
நெத்திலி மீனு வேணாமா
நித்தம் நித்தம் கொழம்பு வெச்சி
நான் ருசிக்கனும் ஆமாமா

ஓடம் விட்டு ஆத்துக்குள்ள
வலை எரிஞ்சு பாப்போமா
கூடத்துல அத்த மக
கையில் கொண்டு சேப்போமா
தந்தனத் தானன தந்தனத் தானன ஏ ஏ ஏ

நாணல் பூத்தாடும் நதியின் ஓரம்
நானும் உன்னோடு நடக்கும் நேரம்
சோலைப் பூங்காற்று சிந்துகள் இன்று பாட

மாலைப் பொன் வெய்யில் மலர்களிலாட
ஊஞ்சல் நானாட உன்னதம் தன்னை தேட
ஆசை நெஞ்சோடு அலை எழுந்தாட

தொட்டதத் தொட்டுத்......தானாட
தோளில் இந்த......மானாட
இன்பம் இன்று உச்சம் என்று
கண்டால் கூட மிச்சம் உண்டு.....(ஏ அய்யாசாமி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY