Sokku Podi Vachirukken
Thangamana Rasa
Hero Ramarajan
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers S.Janaki,Arunmozhi
Year 1989
Song Lyrics

சொக்குப் பொடி வெச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா
வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா
நான் வேண்டியத கேட்டு புட்டேன் ஆமா (சொக்கு)

எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும் தானே
உள்ளதெல்லாம் சொல்லி புட்டேன் நானே
அட ஊடல் என்ன கூடல் என்ன மானே ஹேய் (சொக்கு)

நீ தானே நெஞ்சத்துல
நேசத்தையும் பாசத்தையும் ஏத்தி வெச்ச
பூப் போல பெண் மனச
பொல்லாத ஆசையில மாத்தி வெச்ச

பெண் பிள்ள நாணம் விட்டா
கன்னித் தமிழ் நாட்டுக்கது ஆகாதம்மா
கண் மூடி ஆச வெச்சா
காள மனம் காவலத்தான் தாண்டாதம்மா

தானா கனிஞ்ச கனிதான்
இப்ப நீயும் நானும் தனிதான்
ஏம்மா வெட்டிக் கததான்
அட எதுக்கு இந்த வழிதான்
இஷ்டப் பட்டு நெருங்க இந்த மனம் கெறங்க
எட்டு வெச்சு வந்ததையா ஓம் மடியில் உறங்க (எட்டி)

தனியாக நான் படுத்தா
தொந்தரவு பண்ணுதையா ஓன் நெனப்பு
என நீங்க ஆதரிச்சா
விட்டு விட்டு ஓடுமையா என் தவிப்பு

அறியாத சின்னப் பொண்ணு
அச்சம் கொஞ்சம் நாணம் கொஞ்சம் வேணுமம்மா
புரியாத மோகத்துலபுத்தி தடுமாறி விடக் கூடுமம்மா

நீ தான் என் மாப்பிள ஏந்து என்ன தோளுல
சொன்னா நீயும் கேக்கல இப்ப சூடு வெப்பேன் நாக்குல
மல்லியப் பூ மணக்க உள்ள கத இனிக்க
மத்த கத என்னத்துக்கு வித்தைகள படிங்க..(சொக்கு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY