Karpudaiya Aambalainga
Thangamana Rasa
Hero Ramarajan
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers SP. Balasubramaniam
Year 1989
Song Lyrics

கற்புடைய ஆம்பளைங்க ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க காலம் இல்லே
சந்திரன கண்டு வந்த காலத்திலும்
உங்க சந்தேக புத்தி இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை வெட்டி இல்லை..(கற்புடைய)

படு சுத்தம் மாமன் மனசு
ஒனக்கு பித்தம் ஏறும் வயசு
என்னச் சுத்தும் ஜாதிக் கொடியே
அடி நித்தம் ஏண்டி கிலியே

பாத்துப் பாத்து நான் காத்த மானம்
பாதி வழியில் போகாதம்மா
ரம்ப ஊர்வசி வந்தாலும் கூட
நம்ம மனசு மாறாதம்மா

அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
கண்ணு மட்டும் பார்க்கும்
தப்பு ஏதும் செய்யாதம்மா
என்னச் சுத்தி நித்தம் நித்தம்

அட்ட போல நீயும்
ஒட்டி கொள்ள வேணாமம்மா
அட வேற வழி மாறம்மா
அட வீணா இந்த வேலை
இப்ப என்னத்துக்கு........ (கற்புடைய)

கட்டிப் போட்டு காத்தா
காட்டு வெள்ளம் மீறிப் போகும்
கண்ணு பட்டு கல்லும் கூட
பசும் பொன்னா மாறக் கூடும்

ஓய் பாக்கும் கண்ணில் சந்தேகம் இருந்தா
கயிறு கூட பாம்பாயிடும் புஸ்
பார்வை தெளிஞ்சு சந்தேகம் மறஞ்சா
பாவை மனசும் பூவாகிடும்

சத்தியமா சொல்லிப் புட்டேன் சங்கதியக் கேளு
குத்தம் கொற இங்கே இல்ல
உத்தமனும் ஊருக்குள்ள என்னப் போல யாரு
உண்மைய நீ கேளு புள்ள அட மாமன் ஸ்ரீராமன்தான்
அடி மானே வீண் வேலை இப்ப என்னத்துக்கு..(கற்புடைய)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY