Kanne En Karmugile
Thangamana Rasa
Hero Ramarajan
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers Ilayaraja,K.S.Chitra
Year 1989
Song Lyrics

கண்ணே என் கார்முகிலே கண்ணீரும் ஏனடியோ
பொன்னே என் பூங்கொடியே போராட்டம் ஏனடியோ
பல நாள் இருள்தான் ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்…........(கண்ணே என்)

நான் என்றும் நீ என்றும் வேறென்று ஆகாது
கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது
பூவோடு சேராமல் காற்றெங்கும் போகாது
பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது

தீபத்தைப் போல் என்றும் உன் வாழ்வுதான்
தியாகங்கள் உன்னோடுதான்
பாசத்தில் மாறாது உன் பார்வைதான்
பார்க்கின்றேன் உன்னோடுதான்
தனியாய் இருந்தேன் துணையாய் இணைந்தாய்
மாறாது நம் காதலே.......(கண்ணே)

கல்யாணப் பூ மாலை போடாத ஓர் மாது
கண்ணீர் மாலை போட்டாளே இப்போது
தோளோடு பூ மாலை வாராமல் போகாது
தொடரும் உறவோ எப்போதும் மாறாது

சோகத்தின் சங்கீதம் சுகமானது
சொந்தங்கள் திரை போடுது
பாசத்தில் துன்பங்கள் உண்டானது
வேஷங்கள் விலை பேசுது
உயிரும் உறவும் உணர்வும் நீயே
உன்னில் இவள் பாதியே......(கண்ணே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY