Vasam Veesuthe Oru Jathi
Ketti Melam
Hero M.Karthik
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers S.P.Shailaja
Year 1985
Song Lyrics

வாசம் வீசுதே ஒரு ஜாதி மல்லிகை
பாவை மேனி நீரில் நீந்தி ஆடுதே
ஆசையாக ஆடிப் பாடுதே மனமே
வாசம் வீசுதே ஒரு ஜாதி மல்லிகை

பூ மேனி தேன் கிண்ணமோ அதை
சுவைத்திட நாள் தோறும் வண்டாடுதே
காணாத பேரின்பமோ அதில்
கலந்திட பூ மாரி பொழிகின்றதே

பருவம் தேடும் அழகே
பனியில் தூங்கும் மலரே..சுகம் சுகம்...
சுகம் சுகம் நாளும் சுகம் சுகம்
தினம் தினம் தேடும் மலர் வனம்
நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ..(வாசம்)

தேனாறு பாய்கிறதே உடல்
நெளிந்திடும் மீனாக விளையாடுதே
மாஞ்சோலக் கனி ஆடுதே அது
சுவை தர தானாக வந்தாடுதே

தென்றல் தேடும் மலரே
சிந்து பாடும் கவியே....சுகம் சுகம்...
சுகம் சுகம் நாளும் சுகம் சுகம்
தினம் தினம் தேடும் மலர் வனம்
நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ..(வாசம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY