Thottukko Pattukko Jeebomba
Ketti Melam
Hero M.Karthik
Music Director Ilayaraja
Lyricist Idhaya Chandran
Singers Malasiya Vasudevan,Manjula
Year 1985
Song Lyrics

தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீபூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீபூம்பா
கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே அல்தாப்பு நீ பண்ணுறே
அட ஃபுல் ஸ்டாப்பு நான் வெக்கிறேன்..(தொட்டுக்கோ)

வெங்காய பஜ்ஜி வட வேக வெச்ச கார வட
இனிக்கிறவன் நீதானே இனி ஒரு தடையோ
ஆத்தூரு ஆம வட சாத்தூரு கீர வட
ஒறைக்கிற மிளகாயே உனைத் தொட வரவோ ஹே
சும்மா நீ பாக்குறே ஜாங்குரி
கண்ணாலே திங்குறே போக்கிரி

ஜோடி கொஞ்சம் சிறுசு சிறுசு
லேடி ரொம்ப புதுசு புதுசு
ஆட வந்த எளசு எளசு
தாங்கவில்லே மனசு மனசு
ஜாலி நமக்கு வேலி எதுக்கு
பாவை எனக்கு பருவம் இருக்கு....(தொட்டுக்கோ)

எங்கூரு ஆப்பிரிக்க என் பேரு கத்திரிக்கா
ஹேய் இடைவெளி வரலாமா இது புது மெரினா ஹே
எம் பாட்டு மேடையிலே எல்லாரும் போதையிலே
ஹோ தொடத் தொட சுகம் தானா இது புது ஜிகுனா
மன்னாரு பாக்குறான் ஜாடையா
துண்ணூரு பூசுறேன் வாரியா

ஹோ நீயும் வந்து.....ஒரசு ஒரசு
பாயும் சின்ன.....வயசு வயசு
தேவைப் பட்டு......தினுசு தினுசு
ஓட வேணும்......பழசு பழசு
மேளம் இருக்கு தாளம் இருக்கு
காளை இருக்க கவலை எதுக்கு...(தொட்டுக்கோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY