Thagame Undanathe
Ketti Melam
Hero M.Karthik
Music Director Ilayaraja
Lyricist Idhaya Chandran
Singers K.J.Jesudass,Uma Ramanan
Year 1985
Song Lyrics

தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
உனைத் தொட
என் தேகமே பூ மேடையே தேரேறி நீ வா வா
உனைத் தொட......(தாகமே)

நெஞ்சு துடிக்குதடி உடல் வெந்து கொதிக்குதடி
உந்தன் சின்ன மணி இதழ் நித்தம் குளித்திட
பங்கிடு பச்சக் கொடி

எந்தன் மடி மீது துள்ளி வந்துக் குடியேறு
அந்த மன்மத மந்திர வேதம் முழுவதும்
சொல்லி விளையாடு

மல்லிகைக் கூந்தலை மெல்லத் தரையினில்
பஞ்சணை போடடியோ லாலலல் லல்லல்ல
வேகமோ மோகமோ
மங்கள நேரத்தில் சங்கம காலத்தில்….(தாகமே)

அந்தி வரும் பொழுது விழி காணும் வண்ணக் கனவு
இந்த சந்தன மேனிக்குள் செந்தணல் ஊற்றுக்குள்
ஊறும் பல இரவு

கொஞ்சும் இளமயிலே வரும் கோலம் இளமயிலே
வண்டு முத்திரை வைத்திட அத்தனைப் பூக்களும்
ஏங்கும் தனிமையிலே

முத்துக் குளிக்கையில் தங்க மணிக்கரம்
என்னைச் சிறையிடுமோ லாலலல் லல்லல்ல
நாணமோ தோணுமோ
இந்த இளம் குயில் உன்னைத் தழுவிட.....(தாகமே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY