Kandangi Sela Thangame
Ketti Melam
Hero M.Karthik
Music Director Ilayaraja
Lyricist Aalangudi Somu
Singers S.P.Shailaja
Year 1985
Song Lyrics

கண்டாங்கி சேல தங்கமே தங்கம்
காத்தாடும் வேள சங்கதி சொல்லும் அடி
கத்திரிப் பூவே கன்னிப் புறாவே கவனம் எங்கேடி
கற்கண்டு பாகு கன்னியுன் நெஞ்சின் கனவு என்னாடி (கண்டாங்கி)

சொல்லாமல் வந்தால் என்ன
சொர்க்கமே கண்டால் என்ன
கட்டழகை தொட்டால் என்ன செல்ல மாமா
கண்ணாரக் காணாமல் தாங்காது ராஜா
உன்னோடு கொஞ்ச வந்த சிங்கார ரோஜா
என்னடியம்மா செங்கமலம்... ஆ... ஆ... ஆ...

என்னடியம்மா செங்கமலம்
எங்கேடியம்மா உன் பயணம்
கொண்டவன் வந்ததும் கண்ட கனவதை
சொல்லிடத் துள்ளுவதேனடியோ......(கண்டாங்கி)

தொட்டால் சிவந்து விடும் சிட்டுக்கு பட்டுக் கன்னம்
தொடாமல் சிவந்ததென்ன கன்னிக் கரும்பே
தேனோடு தினை கலந்து மாவிளக்கு ஏத்தி
மீனோடும் கரை ஓரம் நீ ஏத்த வேணும்
கெட்டி மேளச் சத்தம் கேட்டுக்கடி...டும்டும்டும்

கெட்டி மேளச் சத்தம் கேட்டுக்கடி
ஊட்டிக் கிழங்கே சக்கரையே
தென்னங்குலை என மின்னும் உடம்பினை
கண்ணும் கருத்துமாய் பாத்துக்கடி...(கண்டாங்கி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY