Amma Nee Kannamoochi
Ketti Melam
Hero M.Karthik
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers Uma Ramanan
Year 1985
Song Lyrics

அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல் நான் வாடிடலாமா
ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே
உனை அழைத்தேனே குரல் கொடுத்தேனே..(அம்மா)

ஊர்கோலம் போகும் மேகங்களே
எங்கே என் தாய் என்று கூறுங்களே
ஆகாயம் நீந்தும் பறவைகளே
என் தாயை அழைத்திங்கு வாருங்களே

இருவரும் வேறு திசை இருக்க
இடையினில் காலம் திரை இருக்க
திரைகளும் இங்கே விலகாதோ
தாய் முகம் கண்ணில் தெரியாதோ..(ஒரு மனம்)

சீதாவைத் தேடி ஸ்ரீ ராமன்தான்
காடென்றும் மேடென்றும் அலைந்தானம்மா
மாதாவைத் தேடி மகள் வந்தது
வால்மீகி எழுதாத கதை தானம்மா

துடிக்குது இங்கே ஒரு மனமே
கிடைத்திட வேண்டும் தரிசனமே
நினைவுகள் யாவும் நீயாக
பல வழி தாண்டி நான் போக...(ஒரு மனம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY