Nenachu Nenachu Manasu
Mull Illatha Roja
Hero Delhi Ganesh & Chakravarthy
Music Director Murali Raj
Lyricist K. Ramraj
Singers P.Suseela
Year 1982
Song Lyrics

நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..(நெனச்சு)

பால் பழம் இருக்க பசிக்கவில்லை
என்று அவர் சொல்ல
ஏன் என்று கேட்க கன்னி பருவம்
என்று என்னை அள்ள

நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
உள்ளம் தவிக்க உடலும் துடிக்க
இதழ்கள் இரண்டும் இணைய இணைய...(நெனச்சு)

நான் வெட்கம் கொள்ள
நாலு கண்கள் மாறி மாறி பேச
தேன் மழை பெய்ய
அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்

நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க
கொஞ்சி குலவி விடிய விடிய விடிய.....(நெனச்சு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY