Vaanam Nalla Pozhiyanum
Krodham
Hero Prem
Music Director Sankar Ganesh
Lyricist Udhayanan
Singers L.R.Eswari
Year 1982
Song Lyrics

வானம் நல்லா பொழியணும்ங்க நாம
வாழணும்னா பயிரு பச்ச விளையோணுங்க
ஊரோடு சேர்ந்து வாழோணும்
இது வழி வழியா வந்ததுங்க உண்மைதாங்க (வானம்)

ஏரோட்டம் தானுங்க எல்லாமே கொடுக்குங்க
செழிச்சு வளரும் கம்பும் நெல்லும் உணவாகும்
நமக்கு உணவாகும் உறவாகும்
கொடுக்கும் தெய்வம் வாராதோ
எடுக்க எடுக்க தாராதோ
வறுமை எல்லாம் நீங்காதோ
வசதி எல்லாம் பொங்காதோ

ஹே....பாரு பாரு செல்லாத்தா
ஊரு பேரு சொல்லாத்தா
சாமி கும்பிடு நல்லாத்தான்
பூமி தரும் எல்லாந்தான்.......(வானம்)

கிளியிருக்கிற மாமரத்தில்
குயிலும் வந்து கூவாதோ
கோழிக் கூட நெல்லுமணியை
கொத்தி கொத்தி திங்காதோ
இனிப்புக்கு தானுங்க கொஞ்சம் இங்கே கேளுங்க
பொங்கல் வந்தா அறுவடைதாங்க ஒண்ணா சேருங்க (வானம்)

பச்சடி சம்பா கிச்சடி சம்பா
மூட்டைக் கட்டி போட்டாராம்
கீரை குழம்பு மீன வறுத்து
சமச்சு சமச்சு தின்னாராம்
வெத்தலப் பாக்கு சுண்ணாம்பு ஜாதி பத்ரி கிராம்பு
ஏலக்கா சேத்துக் கிட்டா வாய் மணக்கும் தேனாட்டம் (வானம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY