Mami Sivagami Enga
Ilanjodigal
Hero M.Karthik & Suresh
Music Director Sankar Ganesh
Lyricist Aruppukottai Thavasumani
Singers SP. Balasubramaniam,Malasiya Vasudevan
Year 1982
Song Lyrics

மாமி சிவகாமி எங்க இளஞ்ஜோடிகள காமி
போடாத பூட்டு வச்சிருவோம் வேட்டு
காதலுக்கு பச்சக்கொடி காட்டு ஆஹாஹ்....
மாமி கண்ணாடி மாமி எங்க இளஞ்ஜோடிகள காமி

மாமின்னா மாமி டோய் மாமி நமக்கு சாமி டோய்
மனசு மாறி கட்டி கொடுக்கும் கெட்டிக்கார மாமி டோய்
நாளு பாத்து கெழம பாத்து
தாலி கட்டோணும் சொல்லேன்டா...

சிறையெடுத்த கண்ணன் கதை தெரியுமான்னு கேளுடா
தினைப்புலத்து வள்ளி கதை புரியுமான்னு கேளுடா
ஆணும் பெண்ணும் சம்மதிச்சா அதுக்கு மேல என்னடா
அலட்டிக்காம கல்யாணத்த நடத்திக் காட்ட சொல்லுடா (மாமி)

மானாமதுர காளங்க மயக்கிவிட்டது ஆளங்க
தானா வந்த ஸ்ரீதேவிய தள்ள வேணாம் கேளுங்க
இங்கே ரெண்டு அங்கே ரெண்டு
இதயங்கள் ஏங்குது பாரம்மா

தஞ்சாவூரு தவுல வச்சு தாளம் தட்ட சொல்லும்மா
கும்பகோணம் வீணை வச்சு ராகம் மீட்ட சொல்லும்மா
பத்துமாதம் ஆன பின்னே பேரன் பொறக்கும் பாரம்மா
பாட்டி வந்து தொட்டில் கட்ட ராசி இருக்கு கேளும்மா (மாமி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY