Chinna Chinna Thangakatti
Avanukku Nigar Avane
Hero Suman
Music Director Sankar Ganesh
Lyricist Kannadasan
Singers L.R.Eswari
Year 1982
Song Lyrics

சின்ன சின்னத் தங்கக்கட்டி
சொன்னதெல்லாம் அந்தரங்கம்
தெரியுதா புரியுதா ஆஹ்.......

சிந்திவிட்ட சிந்தனையில் மந்திரத்து
மொட்டு ஒன்று வளருதா மலருதா ஆஹ்...
ரம்பை உன்னை அழைக்க வந்தாள் ஓஹோய்..
நல்ல கதை படிக்க வந்தாள்.......(சின்ன)

பால் போல் மேனியில்
பூப்போல் நாடகம்
நடக்கட்டும் மயங்கட்டும்
ரசிக்கட்டும் தொடரட்டும்

இந்திர வட்டம் சந்திர வட்டம்
எத்தனை வட்டம் இருக்கின்றது
இத்தனை வட்டம் உள்ளது மோகம்
முத்து நிறத்தில் ஜொலிக்கின்றது

அருகினில் இரு சுவை பல கொடு
இடையினில் மது சிந்தட்டும் (சின்ன)

ராஜா.....ராணியின் ஆசைக் கோடுகள்
நெருங்கட்டும் விளங்கட்டும்
ரகசியம் எழுதட்டும்

கன்னமிரண்டில் மின்னல் வெளிச்சம்
தன்னை மறந்து இறங்கி விடு
என்னிடமுள்ள பெண்மையறிந்து
என்னிடம் வந்து தங்கி விடு

இவளது உடல் பழரசக் கடல்
அதிலொரு சுகம் கொள்ளட்டும் (சின்ன)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY