Muthu Muthu Penne
Manithan
Hero Rajinikanth
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singers Vani Jayaram
Year 1987
Song Lyrics

ஆஆஆஆஆ......ஹாஆஆஆ..ஆஆஆ..
முத்து முத்து பெண்ணே
முத்தம் தரும் கண்ணே
அன்னை சொல்லும் பாட்டில்
அர்த்தம் உண்டு பொன்னே
கட்டுப்பட்டு வாழும் கண்மணியே வாழ்க
உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க (முத்து)

ரத்தபந்தம் என்னென்ன செய்யும்
கண்டு கொண்டேன் கண்ணே
காயம் கொஞ்சம் ஆறட்டும் என்று
கண்ணீர் விட்டேன் பெண்ணே..

காயம் என்ன காயம் என்று
கலங்கி போனேன் மானே
காயம் அல்ல தியாகம் என்று
தெரிந்துக் கொண்டேன் நானே
தேனே என்னை காத்து நின்ற தெய்வம் நீ (முத்து)

மல்லிகையே மங்கல பூவே மாமா
மாமாங்கமாய் வாழ்க
துயரங்கள் சூழ்கின்ற போதும்
தூய மனம் வாழ்க

சுவருக்கும் காதிருக்கும்
உணர வேண்டும் உண்மை
சத்தியத்தை நம்பி நின்றால்
நடப்பதெல்லாம் நன்மை
நாளை வெற்றி மாலை வரும் அல்லவா (முத்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY