Manithan Manithan Evanthan
Manithan
Hero Rajinikanth
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singers Malasiya Vasudevan
Year 1987
Song Lyrics

மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து
பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி
நிலைப்பவன் மனிதனா ?

பிறருக்காக கண்ணீரும்
பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே
மனிதன் மனிதன் மனிதன்..

அடுத்த வீட்டில் தீப்பிடிக்க
நினைப்பவன் மனிதனா ?
அந்த நேரம் ஓடிவந்து
அணைப்பவன் மனிதனா ?

கொடுமை கண்டு கண்ணைமூடி
கிடப்பவன் மனிதனா ?
கோபம் கொண்டு நியாயம் கேட்டு
கொதிப்பவன் மனிதனா ?
கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா
கொடுப்பவன் எவனடா அவனே மனிதன்…..(மனிதன்)

ஏழைப் பெண்ணின் சேலைத் தொட்டு
இழுப்பவன் மனிதனா ?
இரவில் மட்டும் தாலி கட்ட
நினைப்பவன் மனிதனா ?

காதல் என்ற பேரைச் சொல்லி
நடிப்பவன் மனிதனா ?
கற்பை மட்டும் கரண்சி நோட்டில்
கறப்பவன் மனிதனா ?
தன்மானம் காக்கவும் பெண் மானம் காக்கவும்
துடிப்பவன் எவனடா அவனே மனிதன்…..(மனிதன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY