Devamirdham Jeevamirdham
Moondru Mugam
Hero Rajinikanth
Music Director Sankar Ganesh
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1982
Song Lyrics

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள்
உண்டாகும் பேரின்பம்......

டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா.......தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா.........(தேவாம்ருதம்)

இகம் பரம் சுகமாகலாம்
இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தபம் ம்..இனியேதடி
மனம் தினம் உனது மடியில்

இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம்
உண்டாகும் பெண்ணாலேதான்....(தேவாம்ருதம்)

தளர் நடை தடுமாறுதே
தளிர் இடை தழுவ தழுவ
தணல் சுடும் நிலையானதே
விரல் நகம் பதிய பதிய

மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும்
மின்சாரம் பாய்கின்றதே...(தேவாம்ருதம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY