Pachamolaka Chattini
Nandri Meendum Varuga
Hero Prathap Bothan & Rajinikanth
Music Director Shyam
Lyricist Udhayanan
Singers Kousalya,Udhayanan
Year 1982
Song Lyrics

பச்சமொளகா சட்டினி வச்சான்
பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்
பாயசம் சுடச் சுடச் சுடச் சுட
பருவ மச்சான் விருந்து வச்சான்
(எங்க வச்சான் எப்படி வச்சான்)...(பச்ச)

தஞ்சாவூரில் தொட்டுப் புடிச்சான்
தங்கத் தேரில் ஏற்றி வச்சான்
திருச்சி மலைக்கோட்டை ஏறி
தெப்பக் கொளத்தப் பாக்க வச்சான்

ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி
சீர்சனத்த ? சொல்லி சொல்லி
குளித்தலைக்கு கூட்டி வந்தான்
குளிக்க குளிக்க சிரிக்க வச்சான்
பருவ மச்சான் விருந்து வச்சான்
பருவ மச்சான் விருந்து வச்சான்....(பச்ச)

ஆயிரங்கால் மண்டபத்த மதுரையிலே காட்டி வச்சான்
ஆத்தாடி ஆத்தாடி எண்ணி எண்ணி சொன்ன மச்சான்
(அம்புட்டுத்தானா அப்புறம் சொல்லு)
கும்பகோணம் கண்டு கண்டு
மாமாங்கம் கொளத்துக்குள்ளே குதிச்சு குதிச்சு
நனச்சு வச்ச புதுசு புதுசு மனசுன்னா

பாளையங்கோட்டையில் பல்லவி வச்சான்
செங்கோட்டையில் சரணம் வச்சான்
பட்டுக்கோட்டையில் பாடி முடிக்க
புதுக்கோட்டையில் ராகம் வச்சான்

மன்னார்குடியில் பொறந்த மச்சான்
மணப்பாறையில் மயங்க வச்சான்
மொறப்பொண்ண தொட்டுத் தொட்டு
மருதாணி அரைக்க வச்சான்....(பருவ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY