Kadhal Kanavugale
Nandri Meendum Varuga
Hero Prathap Bothan & Rajinikanth
Music Director Shyam
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1982
Song Lyrics

I love you...லா லா லா
I belong to you...I love you...லா லா லா

காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள் ஹேஹே

பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் சாலை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே

இதயம் முழுதும் ஒரு சங்கீதம்
கனவில் தெரியும் அதன் ரீங்காரம்
ஏதோ ஒன்று நெஞ்சில் நீராடும்

இனிய கனவொன்று உள்ளாடும்
நினைவின் சுமையில் மனம் தள்ளாடும்
கண்ணும் நெஞ்சும் இன்று போராடும்

பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ஹே பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் சாலை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை....(காதல்)

இரண்டு நதி எழுந்து கொஞ்சட்டும்
புரண்டு விழும் அலைகள் சிந்தட்டும்
பெண்மை எங்கும் விட்டுப் போகாதே

நதியை பிரிந்த அலை துள்ளாது
மலையில் பிறந்த நதி நில்லாது
கண்ணை விட்டு இமை தூங்காது

நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் சாலை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை...(காதல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY