Kokku Saiva Kokku
Muthu
Hero Rajinikanth
Music Director A.R.Rahman
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,Theni Kunjaramma
Year 1995
Song Lyrics

கொக்கு சைவக் கொக்கு ஒரு
கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு அது
ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு…(கொக்கு)

கொண்டாடும் வயசுப்பையா
பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
தாம்பத்ய வாழ்க்கையிலே
சட்டங்கள் இருக்குதைய்யா
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
I love you I love you நீ 12 times சொல்லு

நித்தம் நீ ஆறு முற முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற...சந்தோஷப்படுத்திவிடு
நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா
பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா (கொக்கு)

வயசான சுந்தரியே மன்மதன் மந்திரியே
தாம்பத்யப் பாடத்திலே பிஹெச்டி முடிச்சவளே
அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு

இந்நாளில் மனிதனுக்கு சோத்துக்கு வழியில்லையே
ஒக்கார்ந்து காதலிக்க யாருக்கும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு..(கொக்கு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY