Aathangarai Arasamaram
Sigappukkal Mookkuthi
Hero Kamalahasan & Vijayakumar
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1979
Song Lyrics

ஆத்தங்கரை அரசமரம் காத்தடிச்சு ஆடுது
அந்திப்பட்ட நேரத்திலே அழகு குயில் பாடுது (ஆத்த)

பட்டணத்து வீதியிலே பாராத காட்சியிது
படைத்தவன் பெருமைக்கெல்லாம் சரியான சாட்சியிது
அத்தனையும் அழகு வெள்ளம் ஆனந்த வெள்ளம்
ஆலமரத் தொட்டில் போலே ஆடுதம்மா என்னுள்ளம் (ஆத்த)

தங்கரதம் தனியாக தானாக போகுதம்மா
தண்ணிக்குடம் சின்னக்குடம் தளதளன்னு தளும்புதம்மா
பட்டுக்கட்டி பொட்டு வச்ச பால் போன்ற பொண்ணு
பாத்தாக்க பொண்ணு இல்ல தேவதையில் ஒண்ணு (ஆத்த)

முந்தானை அசையுதம்மா முன் கொசுவம் சரியுதம்மா
மோகமிட்ட கூந்தல் கூட ராகம் ஒண்ணு பாடுதம்மா
மல்லிகையில் கிள்ளி வைத்த மகராசி கன்னம்
மங்கலத்தை சொல்லி சொல்லி சங்கொலிக்கும் சின்னம் (ஆத்த)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY