Ambigaiye Nayagiye
Sigappukkal Mookkuthi
Hero Kamalahasan & Vijayakumar
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan,T.L.Maharajan
Year 1979
Song Lyrics

அம்பிகையே நாயகியே
ஆயிரம் கண் தெய்வமடி
நம்பி வரும் நல்லவர்க்கு தேவி
நாங்கள் நாடுகின்ற தெய்வ அபிராமி (அம்பிகை)

வண்ணமுகிலே தமிழ் மழையே
அருட்கலையே அறநெறியே உனை
நம்பியே வாழ்கிறோம் தாயே எங்கள்
நாளைய தேவதை நீயே

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

செங்கமல பூவிடையே
வெண்கமலம் போலெழுந்து
திங்கள் முகம் கொண்டெழுந்து தேவி
எங்கள் திருக்கடவூரின் அபிராமி

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

கண்ணுடைய நாயகியே கவிமுத்து மாரியம்மா
பண்ணுடைய காசி விஷாலாட்சி இந்த
பாரதமே உன்னுடைய ஆட்சி
கங்கை நதி பொங்கும் கரை தங்கும் உனை
எங்கள் துணை கொண்டோமம்மா எங்கள் தாயே
எங்கள் கோவிலின் தேவதை நீயே

தென்மதுரை வாசலிலே தெள்ளமுதமாய் எழுந்த
அங்கயற்கண்ணி நாயகி மீனாட்சி என்மேல்
அன்பு வைத்து நீ கொடுத்தாய் திருக்காட்சி

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

காஞ்சி ஸ்தலம் மீதிலொரு
வாஞ்சையுடன் தோன்றும் துணை
சங்கரன் பணிந்திடும் காமாட்சி உன்னை
எம் கரம் பணியும் நாள் வந்தாச்சு

விசாலாட்சி மீனாட்சி காமாட்சி......
விசாலாட்சி மீனாட்சி காமாட்சி......
விசாலாட்சி மீனாட்சி காமாட்சி......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY