Pachaimani Pavazhamani
Hare Radha Hare Krishna
Hero Kamalahasan
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1986
Song Lyrics

சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு
சிட்டான் சிணுக்கு சிணுக்கு சிணுக்கு
சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு
சிட்டான் சிணுக்கு சிணுக்கு சிணுக்கு

பச்சை மணி பவழ மணி ஓம் மேனி
கட்டழகு வட்ட முக ராணி
குண்டு மல்லி பட்டு மல்லி ஓன் கண்ணு
கொஞ்ச வந்தா ஒட்டிக் கொள்ள எண்ணு
வாம்மா கன்னிக் குயிலே நான் தான் மாமா
ஏதோ காதல் ஜுரம் கண்டால் வரும்

பட்டு மெத்த பஞ்சு மெத்த பூ மேனி
கட்டழக கட்டிப் பிடி தேன் தான்
சிட்டு விழி பட்டு விழி தாவாதோ
பெண் மயிலின் நெஞ்சுக்குள்ளே நீ தான்

தத்துகின்ற தத்தை இது
மெத்தை இட்டு ஒட்டி உறவாட நெஞ்சு வாட
அச்செடுத்த சித்திரம் போல்
இங்கொருத்தி கண்ணோடு கண் பாட காதல் தேட

நெஞ்சிரண்டு இஷ்டம் ஆனது
இதில் யாருக்கொரு கஷ்டம் ஆனது
கண்ணன் இவன் தானோ ராதை இங்கு நானோ
என் பெண்மை நாணம் கொள்ள

ராதைப் பெண் கொடுத்திட கிருஷ்ணன்தான் எடுத்திட
அச்சங்கள் தினசரி அம்போதான் ஹரி ஹரி
சரி சரி ஹரி ஹரி
சரி சரி சின்னக் கிளி……(பட்டு)

கன்னி மலர் வண்ண மலர்
கள்ளிருக்கும் சின்ன மலர் வாட காற்றில் ஆட
ஆசை மொழி மூக்கு முழி
அத்தனையும் கண்டு ஒரு வண்டு ஆடும் வந்து

காதலிச்ச கண்ணும் இருக்க
நெஞ்சு கொந்தளிச்ச பெண்ணும் இருக்க
கன்னம் எனும் தேனோ கன்னம் இடத் தானோ
அன்பே வா அள்ளிக் கொள்ள

பொன்னூஞ்சல் இதான் இதான்
பூந்தென்றல் இதான் இதான்
முந்தானை பிடி பிடி குழலூதும் ஹரி ஹரி
சரி சரி சின்னக் கிளி
சரி சரி ஹரி ஹரி....(பச்சை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY