Unai Kanadhu Naan Indru
Vishwaroopam
Hero Kamalahasan
Music Director Shankar-Ehsaan-Loy
Lyricist Kamalahasan
Singers Kamalahasan,Sankar Mahadevan
Year 2013
Song Lyrics

தக தக தக தின தின தின
நக நக நக திதுகு தான தான தான
திகிட திகிட தகின தான தாகிடதான
திகிதி தகத தீ தீ தீ தானு தானு கெந்ததானு
தானு தானு கெந்ததானு
தானு தானு கெந்ததானு

அதிநவநீதா அபிநய ராஜா
கோகுல பாலா கோடி ப்ரகாஷா
விரக நரக ஸ்ரீ ரக்‌ஷக மாலா
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்
இத்தவணை எனை ஆட்கொள்வாயா

சூடிய வாடலை சூடிய வாகள
வாடிய சிந்தை திரும்பத்தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா

ஆயர் தம் மாயா நீ வா…ஆயா மாயா
ஆயர் தம் மாயா நீ வா…ஆயா மாயா
ஆயர் தம் மாயா நீ வா..ஆயா மாயா வா...

உன்னைக் காணாது நான்
இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா....க்ருஷ்ணா...

உன்னைக் காணாது நான்
இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே...

உன்னைக் காணாமல் உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல் உன்னைக் காணாமல்
கமதநிஸ நிதபம கம ரிகரிஸ

உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே

நளினி மோகன ஷியாமள ரங்கா
தீம் தீம் கிடதக தின்னா
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
கிடதக தீம் தீம் தீம்னா

சரிவர தூங்காது வாடும்
அனுதினம் உனக்காக ஏங்கும்
ராதா தான் உனக்கென
ராதா தான் உனக்கொரு ராதா தான்

அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்

எதிர் பாரமலே... அவன்
ஓ... பின்னிருந்து வந்து எனை
பம்பரமாய்ச் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்...
இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி.....

உடல் அணிந்த ஆடை போல்
எனை அணிந்து கொள்வாயா
இனி நீ இனி நீ... கண்ணா
தூங்காத என் கண்ணின்

துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ...இது நேராமலே... நான்
உன்னை பாராமலே... நான்
இந்த முழு ஜென்மம் போயிருந்தால்...
என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா
காமக் கலைஞன் கண்ணா
கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY