Jora Parakuthe Seera
Manmadhan Ambu
Hero Kamalahasan & Madhavan
Music Director Devi sri prasad
Lyricist Kamalahasan
Singers Devi sri prasad
Year 2010
Song Lyrics

ஹேய் ஜோரா பறக்குதே சீரா சொருகுதே
கூரா இருக்குதே ஊரக்கலக்குதே
ஹேய் மேகம் கருக்குதே சாரல் அடிக்குதே
தேகம் கொதிக்குதே காதல் பறக்குதே

ஏய் எவனையும் எவளையும் தொலைக்கிற பாணம்
ஜனத்தொகைப் பெருக்கும் சிறுபாணம்
ஏய் கனவிலும் நனவிலும் தொரத்துற பாணம்
கவலையப்போக்கிடும் பெரும்பாணம்
மன் மதன் அம்பு......மன்மதன் அம்பு

இது குத்தாம நெஞ்சுல விடாது நம்மள
நம்பு நம்பு மன்மதன் அம்பு மன்மதன் அம்பு
இது எட்டாத திசையும் வெட்டாத கனியும் இல்ல நம்பு
மன்மதன் அம்பு மன்மதன் அம்பு

ஏய் சாராயம் தோக்குதே
போதை தலைக்கேறுதே
நாரயணன் நாமமே அம்பு நெஞ்சில் பாயுதே
தானா தேடி வந்து கூடச் சொல்லுதே

தனித்தனி ஆள ஒண்ணா சேர்த்து
உயிர் செய்யும் மன்மத பாணம்
கரும்புல கட்டி எய்யுற பாணம்
மன்மதன் அம்பு......மன்மதன் அம்பு.....இது (குத்தாம)

வீரன் ஆனாலும் சூரன் ஆனாலும்
மாறன் அம்புதான் ஆள பதம் பார்க்குதே
ஏய் தாரம் ஆனாலும் சோரம் போனாலும்
காமன் லீலைதான் அங்கும் அரங்கேறுது

ஏய் தைரியம் இல்லா ஆளையும்கூட
தட்டி எழுப்பும் அம்பு
தாமரை இலையா நீ இருந்தாலும்
நனைச்சுப்புடும் மன்மதன் அம்பு...இது (குத்தாம)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY