Yen Mayakkama
Pattathu Rani
Hero Gemini Ganesan
Music Director T.K Ramamurthy
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1967
Song Lyrics

ஏன் மயக்கமா இன்றுதான் பழக்கமா
மெல்ல வா நெருக்கமா சொல்ல வா சுருக்கமா.....

மது தருவது பாதி மயக்கம்
மாது தருவது மீதி மயக்கம்
பொழுதெல்லாம் பழரசம் பருகலாம் கிண்ணத்தில்
இரவெல்லாம் கவிதைகள் எழுதலாம் கன்னத்தில் (ஏன்)

என்னையே மறக்கிறேன் என்னை நீ மன்னிப்பாய்

ஒரே கொடியிலே இரு கனி கிடைக்கும்
ஒரே சுவையிலே பலவித மயக்கம்
ஒரு முறை அறிமுகம் அதுவரை புதுமுகம்
பலமுறை பழகியும் புதுமுறை அனுபவம்

நான் மயங்கினேன் மயக்கத்தில் மிதக்கிறேன்
மெல்ல வா நெருக்கமா சொல்ல வா சுருக்கமா.....
ஆ.....ஆ....ஆ.....ஆ......ஆ......ஆ.....ஆ....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY