Muthukkal Pathikkatha Kannil
Uzhaithu Vaazha Vendum
Hero Vijayakanth
Music Director Devandran
Lyricist Vairamuthu
Singers K.J.Jesudass,K.S.Chitra
Year 1985
Song Lyrics

முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா

உன் பெண்மை சிவப்பான முத்தம்
கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம்
சிவக்கட்டுமே.......(முத்து)

உன் பேரை சொல்லும் வேளையில்
என் நாவில் தேன் துளி
உன் ஆடை மெல்ல மோதினால்
அப்போது மார்கழி.....

ஆனந்தம் எல்லாம் அள்ளித் தந்தால்
எங்கெங்கே இன்பம் சொல்லித் தந்தால்
இன்னும் நான் சொல்லுவேன் அள்ளுவேன்
அழகே நீயும் இனியென்ன
திருமதி நுனிவரை அனுமதி.....(முத்து)

உள்ளுக்குள் ஆசை உள்ளது யாருக்கு சொல்வது
முந்தானை சேலை என்பது முள்ளாலே தைத்தது
ஆணுக்குள் யாரும் ராமன் இல்லை
பண்பாடு இங்கே பெண்ணின் எல்லை
பெண்ணுக்குள் ஆசையே இல்லையா அடடா
எங்கள் அனுபவம் ரகசியம் அதிலென்ன அதிசயம் (முத்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY