Bhoomi Enna Bhoomi
Uzhaithu Vaazha Vendum
Hero Vijayakanth
Music Director Devandran
Lyricist Vairamuthu
Singers Malasiya Vasudevan
Year 1985
Song Lyrics

பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி
துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால்
கோயில்களும் இங்கே தேவையா...(பூமி)

துட்டுக்காக என்னென்ன வேஷங்கள்
கெட்டுப் போன பின்னாலே கோஷங்கள்
ஓட்டுக்காக என்னென்ன ஜாலங்கள்
ஓடும் நீரில் போட்டார்கள் கோலங்கள்

வண்ணங்கள் சுவர் எங்கும் வண்ணங்கள்
சின்னங்கள் அவமான சின்னங்கள்
இப்போது வாதாடு எப்போதும் போராடு
பாட்டுப் பாடி பஞ்சம் தீராது....(பூமி)

கட்டுப்பாடு என்றெல்லாம் கூறுவான்
காசுக்காக மதமெல்லாம் மாறுவான்
கட்சிக்காக வீரன் போல் பேசுவான்
காசை வாங்கிக் கொண்டாலோ ஏசுவான்

பிச்சைதான் எல்லாமே பிச்சைதான்
கொச்சைதான் நிகழ்காலம் கொச்சைதான்
யுத்தங்கள் இல்லாமல் ரத்தங்கள் சிந்தாமல்
ஏழை வாழ யோகம் இல்லையோ...(பூமி)

கருணை கொண்ட நெஞ்சங்கள் தெய்வங்கள்
கண்ணீர் மாற்றும் உள்ளங்கள் கோயில்கள்
புத்தன் காந்தி சொன்னார்கள் பாடங்கள்
புரிந்து கொண்டது யாரென்று பாருங்கள்

உண்மைக்கு ஒரு நாளும் அழியில்லை
நன்மைக்கு ஒரு நாளும் முடிவில்லை
மாறாத அன்போடு வாழ்கின்ற பண்பாடு
கொண்ட உள்ளம் கோயில் ஆகாதா......(பூமி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY