Vasanthame Arugil Vaa
Amaran
Hero M.Karthik
Music Director Aadhithyan
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam
Year 1992
Song Lyrics

வசந்தமே அருகில் வா....
நெஞ்சமே உருக வா.....

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்..(வசந்தமே)

கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது ஒளி
இரவல் தந்த அவள் மொழி

சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே….(வசந்தமே)

மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர் மரம்
நிழலை கொடுத்த வளைக்கரம்
உயிரும் அவளின் அடைக்கலம்

புண்ணியம் கோடி செய்தவன் நானும்
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே...(வசந்தமே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY