Solli Theriyathu
Song Lyrics

சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது வரும்
உறக்கத்தை கெடுப்பது எது

உள்ளம் தடுமாற உலகம் உருமாற
வெள்ளத்தில் மிதப்பது அது மன
வேகத்தில் பிறப்பது அது (சொல்லி)

கொல்லும் மதியாக கொதிக்கும் நதியாக
கண்ணில் விழுவது எது நெஞ்சில்
கவலை தருவது நேத்து

அஞ்சி நடமாடும் பிஞ்சு உடலாடும்
கொஞ்சி விளையாடுமா அது இரு
குவளை விழியாகும் அது (சொல்லி)

வண்டு நிலை போல மனது தடுமாற
உண்டு சுவைப்பது மது கண்ணில்
கண்டு சுவைப்பது எது

கண்டு களிப்பாக காட்சி செழிப்பாக
கொண்டு வருவது அது இளம்
குமரி என்பதோர் மது (சொல்லி)

ஒன்றில் உயிராக ஒன்றில் பயிராக
நின்று நிலைப்பது எது நெஞ்சைக்
கொன்று முடிப்பது எது

அன்று முதற்க்கொன்று இன்று வரை
இங்கு வந்து மலர்ந்தது அது இனி
வாழ்த்து தருவது அது (சொல்லி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY