Kaatrai Niruthi Kelu
Asal
Hero Ajith Kumar
Music Director Barathwaj
Lyricist Vairamuthu
Singers Sunitha Sarathy
Year 2010
Song Lyrics

காற்றை நிறுத்திக் கேளு
கடலை அழைத்துக் கேளு
இவந்தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்

கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா தல போல வருமா

தல போல வருமா தல போல வருமா
தல போல வருமா தல போல வருமா

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்

முகத்தை குத்துவான் பகைவன்
முதுகை குத்துவான் நண்பன்
பகையை வென்றுதான் சிரிப்பான்
நண்பரை மன்னித்தெழுவான்

போனான் என்று ஊர் பேசும் போது
புயல் என வீசுவான்
பூமி பந்தின் ஒரு பக்கம் மோதி
மறுபுறம் தோன்றுவான்

தோட்டங்களில் பூக்களில் தோட்டா தேடுவான்
தோழர்களில் பகைவரையும் சுட்டே வீழ்த்துவான்
மாயமா மந்திரமா
தல போல வருமா தல போல வருமா
தல போல வருமா தல போல வருமா

நித்தம் நித்தமும் யுத்தம்
இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கு இல்லை

படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டு சிங்கம்போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கம் இல்லை

ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
இழிவென்று ஏசுவான் உன்னை நம்பி
நீ வாழும் வாழ்க்கை உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான்
தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான்
மாயமா மந்திரமா

தல போல வருமா தல போல வருமா
தல போல வருமா தல போல வருமா
தல போல வருமா தல போல வருமா
தல போல வருமா தல போல வருமா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY