Aagaya Thottil Katti
Perumpulli
Hero Babu
Music Director S.A.Raj Kumar
Lyricist S.A.Rajkumar
Singers P.Suseela
Year 1991
Song Lyrics

ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு
மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு
தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட
என் உயிரே நீ உறவாட வா......(ஆகாய)

கண்ணுக்குள் வேலியிட்டு என்
கண்ணாக நான் வளர்த்தேன்
வானத்து வெண்ணிலவ உன்
நெத்திக்கு போட்டு வைப்பேன்

வெண்பனி காலை சந்தங்கள் பாட
சந்தனக் காற்றும் சாமரம் வீச
ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட
ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு....

உயிருக்கு உயிரான என்
உசிர நான் அடகு வச்சேன்
அத மீட்கத்தான் முடியாம
தினந்தோறும் நான் தவிச்சேன்

பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில்
தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள்
சொந்தம் எது வந்தாலும் நம் பந்தம் போலேது
ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY