Ada Onnum Theriyatha
Padikkatha Pannaiyar
Hero Sivaji Ganesan
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1985
Song Lyrics

தொட்டாச் சிணுங்குமடி செடியே...
நீ தொடாம குக்குக்குக்கூ
சிணுங்குவதேன் கொடியே கொடியே ஏ...

அட ஒண்ணும் தெரியாத பாப்பா
ஆள உள்ள வெச்சு போட்டாளாம் தாப்பா
அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே
நீ சுத்துற சுத்துல நித்திர கெட்டது சிங்கார ஒயிலே

நான் ஒண்ணும் தெரியாத பாப்பா
நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா
அட பட்டாள ராசா நான் மொட்டான ரோசா
நீ தொட்டதும் கெட்டது கற்பனை எட்டுது
எண்ணாதே லேசா அட.......(ஒண்ணும்)

பாத்தாலும் பாத்தேன் நான் வாலிபர் உலகம்
என் பக்கத்துல நிக்கிறது ஆம்பளைங்க திலகம்
கட்டபொம்மன் போல என் கண்ணுக்கு முன்னாலே
நிக்கும் பண்ணையாரு உன் நெனப்பென்ன கூறு

அடி சாயாத கொம்புள்ள மானே...
ஒன்ன தாயாக்கும் சிங்கமடி நானே நானே நானே
தெறந்திருக்குது தெறந்திருக்குது கதவு வா
சேந்திருக்குற நேரம் வந்தது உதவு...நான் (ஒண்ணும்)

சூடான மூச்சு என்ன தொட்டதுமே போச்சு
ஏதேதோ ஆச்சு அட இன்னும் என்ன பேச்சு
சிம்மக் குரல் கேட்டு நான் சிக்கிக்கிட்ட ராட்டு
சின்ன வெரல் போட்டு நீ என்னக் கொஞ்சம் மீட்டு

அடி கொட்டாம கொட்டுதடி அருவி....
என் கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட
குருவி குருவி குருவி குருவி
சும்மா சும்மா தெறக்குதையா கதவு
அடியம்மா யம்மா நீயும் கொஞ்சம் உதவு நான் (ஒண்ணும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY