Thanniyillaa Meenai Pola
Thangaikkor Geetham
Hero T Rajendar & Sivakumar
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers L.R.Anjali
Year 1983
Song Lyrics

பாழும் வயிறே நீ பசிக்காது இருந்தாலே
ஏழை எங்களுக்கு கவலை இருக்காதே
கவலை இருக்காதே......

தண்ணியில்லா மீனை போல
கண்ணீரில் நாங்கள் வாட
எங்களை ஏன் படைத்தானோ

நாலு வேளை பட்டினியில்
நான் கிடந்து பாடுகிறேன்
எங்களை ஏன் படைத்தானோ
என் தங்கை அவள் கண்ணில்
ஒரு கங்கையை நான் கண்டேன்..(தண்ணியில்லா)

படிப்பதற்கு ஆசைப்பட்டு
பாதியிலே நிறுத்தி விட்டேன்
தங்கச்சியை ஆளாக்குவேன்
தாலாட்டி சீராட்டுவேன்
சோலை மலராய் இவள் மலர
நான் வேர்வை சிந்தி வளர்ப்பேன்...(தண்ணியில்லா)

தூசு கூட அவள் கண்ணில்
விழுந்தாலும் நான் அழுவேன்
கஷ்டங்களை நான் சுமக்கிறேன்
கண்ணீரில் நான் மிதக்கிறேன்
அவள் சிரித்தால் நான் சிரிப்பேன்
அவள் அழுதால் நான் அழுவேன் (தண்ணி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY