Jilu Jilu Odaiyile
Thangaikkor Geetham
Hero T Rajendar & Sivakumar
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers SP. Balasubramaniam,B.Sasireka
Year 1983
Song Lyrics

பகலென்றும் இரவென்றும் பூமியிலே
நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி
ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய்
செவ்வந்தி ஆடையிலே ஹேய்
நீரில் தாளம் அலை போடுது......(.பகலென்றும்)

தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை
நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள்
திராட்சை பழ ரசத்தின் போதை மகத்துவத்தை
புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்..ஹா....

எனை நோக்கி தூவும்......ஹோய்
உன் வார்த்தை பூக்கள்..ஹா
நெஞ்ச குளத்தில் தேங்கி கிடக்கும்
நினைவை வருடாதோ...ஹேய்....(ஜிலு ஜிலு)

தென்னங்கீற்றுதனை நடனமாட சொல்லி
ஜதிகள் சொல்லுகின்ற தென்றல்
பாவை மேனிதனை நாணம் கொள்ள சொல்லி
ஜாலம் செய்கின்ற ஆண்கள்..ஹா லலலலல

வேல்போன்ற விழிகள் என் நெஞ்சில் பாய
காயம் வரவில்லை மோகம் பிறக்குது
மாயம் தான் என்ன ஹ.........
ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய்
செவ்வந்தி ஆடையிலே ஹேய்
நீரில் தாளம் அலை போடுது......(.பகலென்றும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY