Thatti Paarthen Kottanguchi
Thangaikkor Geetham
Hero T Rajendar & Sivakumar
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers T,Rajendar
Year 1983
Song Lyrics

தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி

தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன் (தட்டி)

தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன்
தாய் போல நான் தானே சீராட்டினேன்
யாரென்று நீ கேட்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்

மலராக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன் (தட்டி)

பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே

கிளியாக நெனச்சு தான் உன்ன வளர்த்த
நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன் (தட்டி)

ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ
ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY