Enathu Raja Sabaiyile
Kalyaniyin Kanavan
Hero Sivaji Ganaesan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1963
Song Lyrics

எனது ராஜ சபையினிலே ஒரே சங்கீதம் அதில்
இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் ஆஹாஆஹா
எனது ராஜ சபையினிலே ஒரே சங்கீதம் அதில்
இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்

மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் அதில்
மைவிழியாள் பாடுகின்றாள் காதல் வண்டாட்டம் ஓஹோஓஹோ
மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் அதில்
மைவிழியாள் பாடுகின்றாள் காதல் வண்டாட்டம்

இந்த முகம் எனது வானில் சந்திரன் அன்றோ - இது
எடுத்து சொல்லும் வார்த்தை எந்தன் மந்திரம் அன்றோ

இந்த முகம் எனது கோயில் கோபுரமன்றோ இது
எனது நெஞ்சில் மெத்தையிட்ட தாமரையன்றோ ஓஹோஓஹோ (மனதில்)

காதல் என்ற கடனிலில் நீ தோணியல்லவா என்னை
கைக் கொடுத்து காக்க வந்த ஞானியல்லவா

ஜாதி மலர் புன்னகை என் வேதமல்லவா – அதில்
சத்தமிடும் உனது இதழ் நாதமல்லவா.....நாதமல்லவா (எனது)

பருவக்காலம் மாறும்போது மாறுவதில்லை –அது
பனி என்றாலும் மழை என்றாலும் வாடுவதில்லை

உருவத்திலே இளமை சென்று முதுமை வந்தாலும் –நம்
உள்ளத்திலே முதுமை சென்று இளமை உண்டாகும்
இளமை உண்டாகும் ........

நமது ராஜ சபையினிலே ஒரே சங்கீதம் அதில்
இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் ஆஹாஆஹா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY