Nee Kobapattal Naanum
Villu
Hero Vijay
Music Director Devi sri prasad
Lyricist Pa vijay
Singers Sagar
Year 2009
Song Lyrics

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.....

நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ....
நீ நிற்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ....

நீ பேசும் வார்த்தை கவிதை என்று விம்மமாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன்
நீ குளிக்கும் போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் நான் கேட்கமாட்டேன்

நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தா கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுத்தும் பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.....(நீ)

உன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குழியில் மீசை முடி நட்டு வைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் அலாரம் வைப்பேன்

அடி சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.....(நீ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY