Sol Sol Sol Anbe Nee Sol
Thalaivaa
Hero Vijay
Music Director Gv prakash
Lyricist Na. Muthukumar
Singers Vijaya Prakash,Abhay Jodhpurkar
Year 2013
Song Lyrics

சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நீல்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்

ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே.....(சொல்)

கனவுகள் கேட்குது நீ வர கை விரல் கேட்குது நீ தொட
யாரோ என்னை பார்க்க ஒரு எண்ணம் தோன்றிட
நீயா என பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட
ஆ... என் நேரம் இன்று அவசரமாக மாறிப்போனதே
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே

இலைகளில் பனித்துளி விழுவதும்
வெயில் வந்து அதன் மேலே எழுவதும்
இயற்கையில் நடக்கிற ரகசியம் அன்பே அன்பே...
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்.....(ஒரு மஞ்சள்)

இருவரும் ஒரு மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில் பேசலாம்
பெண்ணே என் நெஞ்சம் என்னும் பூட்டை திறக்க
கண்ணே உன் கண்கள் அது சாவி குடுக்க
என் பெயரில் உந்தன் பெயரினை சேர்க்க ஆசை வந்ததே
உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே

இது இது இது ஒரு இன்பமா
இது இது இது ஒரு துன்பமா
இன்பமும் துன்பமும் சேர்ந்ததா சொல்வாய் பெண்ணே...
சொல் சொல் சொல் அன்பே நீ சொல் (ஒரு மஞ்சள்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY