Pasanga Pasanga Tamil Pasanga
Thalaivaa
Hero Vijay
Music Director Gv prakash
Lyricist Na. Muthukumar
Singers Benny Dayal,Sheezay
Year 2013
Song Lyrics

பயணம் தொடங்கும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும் பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா தமிழா....

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபற யரல வழள
ஙஞந னமண தமிழன் நான்

எங்கிருந்தாலும் ஓ..நாங்க என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க இந்த
பூமியை அதிர வைப்போம் நாங்க தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்

எங்கள் மயிலாட்டமும் கொஞ்சும் ஒயிலாட்டமும்
கோவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும் எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா..(பசங்க)

பொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர
ஆழம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுற
ஆட்டம் போட்ட போதும் நாம தங்கமான பசங்க
போட்டின்னு வந்தா கிழிக்கும் தமிழ் பசங்க

புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வொரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்ல புள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முறுக்கி வச்ச மீச
கூழா குடிக்க ஆச பச்ச தமிழன்
வெளுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்

கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிக்கட்டும் ஆடுவோம்
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும் திருக்குறள் ஏட்டிலும்
முக்குளித்து மூழ்கிவிட வா வா வா...(எங்கிருந்தாலும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY