Unnale Ennalum En Jeevan
Theri
Hero Vijay
Music Director Gv prakash
Lyricist Na. Muthukumar
Singers Hariharan,Sainthavi
Year 2016
Song Lyrics

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன்மார்பில் சாய்ந்து சாக தோணுதே ஓஹோ..ஹோ..

விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடி மீது சாய்ந்து கதை பேச வேண்டும்
முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழு நேரம் என் மேல் உன் வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே.....(உன்னாலே)

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு என்றே நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பார்க்க நான் பார்க்க காதல் கூடுதே (உன்னாலே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY